இலங்கையின் பணவீக்கம் 8% ஆக அதிகரிப்பு

இலங்கையின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 2026 ஆகஸ்ட் மாதத்தில் 8% ஆக அதிகரித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், ஜூலை மாதத்தில் 7.3% ஆக காணப்பட்ட பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 8% ஆக உயர்ந்துள்ளது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில், உணவுப் பணவீக்கம் 6.3% இலிருந்து 8.5% ஆக குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

அதேவேளை, உணவு அல்லாத பொருட்களுக்கான பணவீக்கம் ஜூலை மாதத்தில் காணப்பட்ட 7.8% இலிருந்து ஆகஸ்ட் மாதத்தில் 7.7% ஆக சிறிதளவு குறைந்துள்ளது.

இதன் மூலம், ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையின் ஒட்டுமொத்த பணவீக்க அதிகரிப்புக்கு உணவுப் பொருட்களின் விலை உயர்வு முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக புள்ளிவிபரத் தரவுகள் தெரிவிக்கின்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore