பூட்டான் சென்ற பிரதமர் ஹரினிக்கு அந்நாட்டு பிரதமர் வரவேற்பு

இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, திங்கட்கிழமை (31) பூட்டானின் பாரோ சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த நிலையில், பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே அவரை வரவேற்றுள்ளார்.

Global Conscious Food Systems Summit மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ஹரினி அமரசூரிய பூட்டான் சென்றுள்ளார்.

ஆகஸ்ட் 31 முதல் செப்டெம்பர் 4ஆம் திகதி வரை நடைபெறும் இந்த மாநாட்டின் ஆரம்ப அமர்வில் பிரதமர் ஹரினி அமரசூரிய நாளை (செவ்வாய்க்கிழமை) உரையாற்றவுள்ளார்.

மேலும், தனது விஜயத்தின் போது பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore