சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளை நாளை (21) நடத்துவதில் சிரமம் ஏற்பட்டால், அவை தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர் இந்த அதிகாரத்தை அதிபர்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தமது பாடசாலையின் நிலைமை மற்றும் நிலவும் வானிலை சூழலை கருத்திற்கொண்டு, பாடசாலையை நடத்துவதா அல்லது நடத்தாமல் இருப்பதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிபர்களே தீர்மானிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





