தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 11 வாகனங்கள் விபத்து – காரணத்தை வெளியிட்ட பொலிஸார்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 11 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்துக்கு அதிக வேகம் மற்றும் சாரதியின் கவனக்குறைவான செயற்பாடே காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெலணிகம மற்றும் தொடங்கொட பகுதிகளுக்கு இடையில் இன்று அதிகாலை சுமார் 6.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காலி நோக்கி பயணித்த டாக்ஸி வாகனமொன்று திடீரென பிரேக் இட்டதையடுத்து, அதிவேக நெடுஞ்சாலையின் பாதுகாப்பு தடுப்பில் மோதி, பின்னர் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்துடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அக்குரஸ்ஸ – கொழும்பு பயணிகள் பேருந்து உள்ளிட்ட மேலும் 8 வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி தொடர் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 8 பாடசாலை மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் உள்ளிட்ட 15 பேர் காயமடைந்து, களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பாடசாலை மாணவர்கள் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் சிறிய காயங்களுடன் தப்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore