யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் இன்று (22) காலை டிப்பர் வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காரில் பயணித்த மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் உள்ளிட்ட மேலதிக விவரங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





