எரிபொருள் விலை உயர்வின் முழுச் சுமையும் மக்களுக்கு இல்லை – அரசாங்கம் நிவாரணம் வழங்க பரிசீலனை

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உள்நாட்டு எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை உயர்வால் ஏற்படும் முழுச் சுமையையும் மக்களிடம் சுமத்தாமல், அரசாங்கத்தின் நிதி மூலம் ஒரு பகுதியை மானியமாக வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக திறைசேரியில் உள்ள நிதியில் ஒரு பகுதியை பயன்படுத்தி, அதிகரித்து வரும் எரிபொருள் விலையின் தாக்கத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், வழங்கப்படவுள்ள மானியத் தொகை இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் ஏற்படும் முழுமையான விலை அதிகரிப்பையும் நேரடியாக மக்கள் மீது சுமத்துவதற்குப் பதிலாக, அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் நிவாரணம் வழங்குவது குறித்து தொடர்ந்து ஆராயப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டால், எரிபொருள் விலை உயர்வின் தாக்கத்துடன் தொடர்புடைய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையேற்றத்தை ஓரளவு கட்டுப்படுத்த உதவும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore