கல்முனை வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிரான சமூக வலைத்தள பதிவுகள்: நீதிமன்றத்தில் வழக்கு

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் அவதூறான மற்றும் சமூக மோதலைத் தூண்டும் கருத்துகள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஹிஜாப் விவகாரம் தொடர்பான சமூக வலைத்தளப் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு, புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள இணையவழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியர் அர்ஜுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராகவும், யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட 2 சமூக வலைத்தளப் பக்கங்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கில் தடையாணை அல்லது நிபந்தனைகளுடன் கூடிய கட்டளை பிறப்பிப்பது தொடர்பில் பரிசீலிப்பதற்காக, அடுத்த கட்ட விசாரணை செப்டெம்பர் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வைத்தியர் சுகுணன் சார்பில் சட்டத்தரணிகளான டயஸ் மற்றும் க. கிசோபனா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore