6 நிறுவனங்கள் மற்றும் பணிப்பாளர்களின் சொத்துக்கள் முடக்கம் – மத்திய வங்கி அதிரடி நடவடிக்கை

இலங்கை மத்திய வங்கி 6 நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பணிப்பாளர்களுக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவின் மூலம் குறித்த நிறுவனங்களும் அவற்றின் பணிப்பாளர்களும் தங்களுடைய சொத்துக்களை விற்பனை செய்வது, மாற்றுவது அல்லது வேறு வகையில் கையாள்வது தடுக்கப்பட்டுள்ளது.

Finance Business Act No. 42 of 2011 சட்டத்தின் 44ஆம் பிரிவின் கீழ் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் அவை உறுதிப்படுத்தப்பட்டு நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள நிறுவனங்கள்:

  • Kasagala Green Plantation (Private) Limited
  • Ceylon Green Life Plantation (Private) Limited
  • Singhe Capital Investment Limited
  • Pro Shop Advertising Holdings (Private) Limited
  • Athens International Education Centre (Private) Limited
  • Eyon Lanka Investment & Film Production International Company (Private) Limited

இதில் Kasagala Green Plantation மற்றும் Ceylon Green Life Plantation நிறுவனங்கள் தொடர்பில் Finance Business Act-இன் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஏனைய நான்கு நிறுவனங்களும் சட்டத்திற்கு முரணாக நிதி வர்த்தகத்தில் ஈடுபட்டதாக அல்லது பொதுமக்களிடமிருந்து வைப்புகளை ஏற்றுக்கொண்டதாக மத்திய வங்கி ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்படாத நிதி நிறுவனங்களில் பணத்தை வைப்பிலிட வேண்டாம் எனவும் மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கிச் சட்டம் அல்லது Finance Business Act கீழ் உரிமம் பெற்ற நிறுவனங்கள் அல்லது சட்டத்தால் குறிப்பாக விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே பொதுமக்களிடமிருந்து வைப்புகளை ஏற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore