மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் நவரத்ன மாரசிங்க மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகியோரை நியமிப்பதற்கான பரிந்துரைகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பியுள்ளார்.
இதேவேளை, மூன்று நீதித்துறை அதிகாரிகளை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீதிச்சேவை ஆணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், பெருமாள் சிவகுமார், ஆனந்தி கனகரட்ணம் மற்றும் ஞானேச லலித் கன்னங்கர ஆகியோர் எதிர்வரும் செப்டம்பர் 23ஆம் திகதி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்மொழியப்பட்ட நியமனங்கள் தொடர்பான தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (22) வெளியிட்டுள்ளது.





