2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக 24 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நிரந்தர ட்ரயல்-அட்-பார் அமர்வு இன்று வழங்கி வருகிறது.
பிரதிவாதிகளுக்கு எதிராக சதி உள்ளிட்ட 23,270க்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
வழக்கில் ஆஜரான 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய 9 பேரையும் விடுதலை செய்து விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களுக்கான தண்டனை தொடர்பான தீர்ப்பை வழங்குவதற்காக நீதிமன்ற நடவடிக்கைகள் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், குற்றவாளிகளுக்கான தண்டனைகள் அறிவிக்கப்படவுள்ளன.





