சீன ஜனாதிபதியை விமான நிலையத்திற்கே சென்று வரவேற்ற ட்ரம்ப்!

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அமெரிக்க விஜயம் அபூர்வமான வரவேற்புடன் ஆரம்பமாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வாஷிங்டனுக்கு அருகிலுள்ள ஜொயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் இராணுவ விமானத் தளத்திற்கே நேரில் சென்று ஷி ஜின்பிங்கை வரவேற்றார்.

ஷி ஜின்பிங் தனது மனைவி பெங் லியுவானுடன் விமானத்திலிருந்து இறங்கியபோது, ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் இருவரையும் நேரில் சந்தித்து வரவேற்றனர். இதையடுத்து இரு நாடுகளின் தேசிய கீதங்கள் இராணுவ இசைக்குழுவினரால் இசைக்கப்பட்டதுடன், சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.

மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த அரசுமுறைப் பயணத்தில் வர்த்தகம், செயற்கை நுண்ணறிவு (AI), பாதுகாப்பு, தைவான் மற்றும் சர்வதேச விவகாரங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் இரு தலைவர்களும் கலந்துரையாட உள்ளனர்.

அமெரிக்காவின் உயர்மட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கும் அரசு விருந்தும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளை, ஷி ஜின்பிங்கின் பிரதிநிதிக் குழுவில் சீன நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் இடம்பெறவில்லை என AFP தெரிவித்துள்ளது.

இந்த விஜயம், அமெரிக்கா–சீனா உறவுகளில் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலவும் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் இடம்பெறுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் வர்த்தக உடன்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான விடயங்களும் முக்கிய இடம்பிடிக்க உள்ளன.

வெள்ளிக்கிழமை காலை ஷி ஜின்பிங்கின் அமெரிக்க விஜயம் நிறைவடையவுள்ள நிலையில், இரு ஜனாதிபதி தம்பதிகளும் வெள்ளை மாளிகையில் தேநீர் அருந்துவதுடன், அமெரிக்க தேசிய ஆவணக் காப்பகத்திற்கும் செல்ல உள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore