அனோஜனுக்கு கருணை வழங்குமாறு சவுதி மன்னரிடம் இலங்கை முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை

சவுதி அரேபியாவில் சிறைத்தண்டனை மற்றும் கணிசமான அபராதத்தை எதிர்கொண்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனுக்கு கருணை அடிப்படையில் நிவாரணம் வழங்குமாறு, சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் அல் சவூத் அவர்களிடம் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையின் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து, 2026 செப்டம்பர் 21ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

பிரதம துணை சபாநாயகர் டொக்டர் ரிஸ்வி சாலிஹ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ள குறித்த கடிதத்தில், அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை குறைப்பது அல்லது நிதி அபராதத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தள்ளுபடி செய்வது தொடர்பில் பரிசீலிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் தொழிலாளியான அனோஜனின் குடும்பம் அவரது வருமானத்தை பெரிதும் நம்பியுள்ள நிலையில், விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகை அவரது பொருளாதார நிலைக்கு அப்பாற்பட்டது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், தண்டனைக்குக் காரணமான சம்பவம் தொடர்பில் அனோஜன் வருத்தமும் மனவருத்தமும் தெரிவித்துள்ளதுடன், மன்னிப்பும் கோரியுள்ளதாகவும், நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) மற்றும் முஸ்லிம்களின் மத உணர்வுகளுக்கு மரியாதை தெரிவித்துள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, சவுதி அரேபியாவின் சட்ட அதிகாரம், இறையாண்மை மற்றும் நீதித்துறை நிறுவனங்களுக்கு முழுமையான மரியாதையை வெளிப்படுத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை – சவுதி அரேபியா இடையிலான நீண்டகால நல்லுறவு மற்றும் நட்புறவை அடிப்படையாகக் கொண்டு மனிதாபிமான ரீதியில் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore