டிக்கோயாவில் பேருந்துடன் நேருக்கு நேர் மோதிய முச்சக்கர வண்டி – சாரதி படுகாயம்


செ. திவாகரன்

அதிவேகமாக பயணித்ததாகக் கூறப்படும் முச்சக்கர வண்டியொன்று, இபோச பேருந்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார்.

ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில் டிக்கோயா வைத்தியசாலைக்கு அருகாமையிலேயே இன்று (25) பிற்பகல் 2.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த சாரதி டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டனிலிருந்து நோர்வூட் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியும், மஸ்கெலியா சாமிமலையிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த இபோச பேருந்துமீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டி சாரதி தொலைபேசியில் உரையாடியபடி அதிவேகமாக வாகனத்தை செலுத்தியதால், வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் எதிர்த்திசையில் வந்த பேருந்துடன் மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என நோர்வூட் பொலிஸின் போக்குவரத்து பிரிவு பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவ்விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன், பேருந்தின் முன்பகுதியும் பகுதியும் சேதமடைந்துள்ளது.
முச்சக்கர வண்டி சாரதியின் கவனயீனமே விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நோர்வூட் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore