இலங்கை அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று (25) 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று மாலை இடம்பெற்ற குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் பதிவாகின.
இதன்படி, ஆதரவு மற்றும் எதிர்ப்பு வாக்குகளுக்கு இடையில் 95 வாக்குகள் வித்தியாசம் காணப்பட்ட நிலையில், 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
📌 வாக்கெடுப்பு முடிவு:
🟢 ஆதரவு – 158 வாக்குகள்
🔴 எதிர்ப்பு – 63 வாக்குகள்
📊 பெரும்பான்மை – 95 வாக்குகள்





