பொதுமக்களின் பங்களிப்பில் சம்மாந்துறைக்கு ஜனாஸா வாகனம் கையளிப்பு

தில்சாத் பர்வீஸ்

நிகழ்வு :
நேரலை 01 : CLICK_HERE
நேரலை 02 : CLICK_HERE
நேரலை 03 : CLICK_HERE

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச மக்களின் ஜனாஸா தேவைகளை நிறைவேற்றும் நோக்கில், பொதுமக்கள், பொது அமைப்புக்கள் மற்றும் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் பங்களிப்புடன் கொள்வனவு செய்யப்பட்ட ஜனாஸா வாகனம் இன்று (25) வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, சம்மாந்துறை பத்ர் ஹிஜ்ரா ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது.

பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதியின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட இவ்வாகனம், சம்மாந்துறை மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேச மக்களின் ஜனாஸா தேவைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.

இதன்போது ஜனாஸா வாகனத்தின் வெள்ளோட்டமும் இடம்பெற்றதுடன், நிகழ்வை முன்னெடுப்பதற்கு பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் பூரண ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.

ஜனாஸா வாகனத்தை தேவைக்கேற்ற வகையில் வடிவமைப்பதற்கான அனுசரணையை பர்சான் ஜனாஸா அவசர சேவை அமைப்பு வழங்கியிருந்தது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல். முஹம்மது ஹனீபா, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் டி. பிரபாசங்கர், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் யு.எல். அப்துல் மஜீட், சம்மாந்துறை ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் மௌலவி எம்.எல்.எச். பசீர் மதனி, சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவர் அஷ்ஷெக் கே.எம்.கே.ஏ. றம்சின் காரியப்பர், செயலாளர் அஷ்ஷெக் எம்.ஐ.எம். இஸ்ஹாக் உள்ளிட்ட உறுப்பினர்கள், பர்சான் ஜனாஸா அவசர சேவை அமைப்பின் தலைவர் எம்.எம். றியாத், சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியத்தின் நிர்வாக தலைவர் மௌலவி ஏ.பீ.எம். றம்சின் (காஷிபி), குடிமரைக்கார் சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பொதுமக்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இவ்வாகனம், அவசர மற்றும் அத்தியாவசியமான சந்தர்ப்பங்களில் பிரதேச மக்களுக்கு ஜனாஸா சேவையை வழங்கும் வகையில் சமூக நலத்திட்டமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore