பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் இன்று (26) அதிகாலை எரிவாயு சிலிண்டர் ஒன்று திடீரென வெடித்ததில் 7 ஊழியர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிவாயு சிலிண்டர் வெடித்ததற்கான காரணம் தொடர்பில் இதுவரை முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.





