கொங்கோவில் விமானம் விபத்து – 14 பேர் உயிரிழப்பு

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் இடம்பெற்ற விமான விபத்தில் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொங்கோவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கிக்வித் நகரிலிருந்து கின்ஷாசா நோக்கி பயணித்த விமானம், கெங்கே என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் இரண்டு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் பயணித்திருந்ததாக கொங்கோ இராணுவத்தின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் எபோமி எகெங்கே வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இராணுவ அதிகாரிகளில் லெப்டினன்ட் ஜெனரல் முதும்போ கடாளை தியண்டே மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் பகுமி லிகுலியா ஆகியோரும் அடங்குகின்றனர்.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், விபத்துக்கான உறுதியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore