ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரான் முன்வைத்துள்ள போர் நிறுத்தம் தொடர்பான கோரிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவிக்கையில், லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் போரை நிறுத்துவது உள்ளிட்ட ஈரானின் கோரிக்கைகள் 7 நாட்களுக்குள் நிறைவேற்றப்பட்டால், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய அராக்சி, இந்த இராஜதந்திர முயற்சி கட்டார் மத்தியஸ்தர்களின் ஊடாக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இரு தரப்பும் உடன்பாட்டை எட்டுவதற்கு அமெரிக்கா தீவிரமாக முன்வந்தால், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கத் தயாராக இருப்பதாகவும் அராக்சி தெரிவித்துள்ளார்.
எனினும், ஈரானின் இந்தக் கோரிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளதாக Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளதாக அத தெரண தமிழ் தெரிவித்துள்ளது.





