லொறியும், வேனும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்து

செ. திவாகரன்

லொறியும், வேனும் நேருக்கு நேர் மோதுண்டு ஏற்பட்ட விபத்தில் வேன் சாரதி காயமடைந்துள்ளார் என ஹட்டன் பொலிஸின் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹட்டன் – பொகவந்தலாவை வீதியில் ஹட்டன, டிக்கோயா தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையிலேயே இன்று (26) முற்பகல் 11.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

பொகவந்தலாவையில் இருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த லொறியும், ஹட்டனில் இருந்து நல்லத்தண்ணி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேனுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகின.

விபத்தில் வேன் சேதமடைந்துள்ளது. விபத்து தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore