யோஷிதா ராஜபக்ஷவின் வழக்கை விசாரணை செய்ய திகதி நிர்ணயம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி போரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, நவம்பர் 3ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (28) நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோது, முதலாவது பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

இரண்டாவது பிரதிவாதியான டெய்சி போரஸ்ட் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அனில் சில்வா, மருத்துவ அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதிபதி, வழக்கை நவம்பர் 3ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார்.

சுமார் 5.7 கோடி ரூபாய் பெறுமதியான பணத்தை மூன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்ததன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாகக் குற்றம் சுமத்தி, யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி போரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அத தெரண தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore