இலங்கையில் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மேல் மாகாண பதில் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்தியர் நவிந்த சொய்சா தெரிவித்துள்ளார்.
‘அத தெரண BIG FOCUS’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது நாளாந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் ஓரளவு வீழ்ச்சி காணப்படுவதாகவும், எனினும் டெங்கு அபாயம் முழுமையாக நீங்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், 7 மாகாணங்கள் தொடர்ந்தும் அதிக ஆபத்து நிலைமையில் காணப்படுவதாகவும் விசேட வைத்தியர் நவிந்த சொய்சா தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றி டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.





