FIFA தரவரிசையில் இலங்கை ஒரு இடம் முன்னேற்றம்

FIFA ஆடவர் உலக கால்பந்து தரவரிசையில் இலங்கை அணி ஒரு இடம் முன்னேறியுள்ளது.

சீஷெல்ஸ் அணிக்கு எதிராக நேற்று (27) நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தரவரிசையில் 187ஆவது இடத்திலிருந்து 186ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணிக்கு 4.31 தரவரிசைப் புள்ளிகள் கிடைத்துள்ளதுடன், தற்போது மொத்தமாக 881.17 புள்ளிகளுடன் 186ஆவது இடத்தில் இலங்கை அணி காணப்படுகிறது.

அண்மைய போட்டிகளில் இலங்கை அணி தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பதிவு செய்துள்ள நிலையில், அதற்கு முன்னர் இரண்டு தோல்விகளை சந்தித்திருந்தது.

இந்நிலையில், சீஷெல்ஸ் அணிக்கு எதிராக மீண்டும் நாளை (29) இலங்கை அணி போட்டியிடவுள்ளது. இந்தப் போட்டியின் மூலம் தரவரிசைப் புள்ளிகளை மேலும் அதிகரிக்க இலங்கை அணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore