இலங்கையின் பொது சுகாதாரத்துறைக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்தியா சுமார் 3 தொன் காசநோய் எதிர்ப்பு மருந்துகளை கொழும்புக்கு அனுப்பியுள்ளது.
இந்த மருந்துகள் இந்திய விமானப்படையின் C-130J விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொது சுகாதார கட்டமைப்புக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.






