அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வீடொன்றுக்குள் இரவு நேரத்தில் புகுந்த சுமார் 6 அடி நீளமான பாம்பு ஒன்று, அங்கு வைக்கப்பட்டிருந்த மூன்று கோல்ஃப் பந்துகளை முட்டைகள் என தவறாக நினைத்து விழுங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பந்துகளை விழுங்கிய பின்னர், பாம்பால் அங்கிருந்து நகர முடியாமல் இருந்த நிலையில், அதனை கண்ட குடும்பத்தினர் உடனடியாக மீட்டு அருகிலுள்ள கால்நடை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
கால்நடை வைத்தியர்கள் மயக்க மருந்து செலுத்தி, பாம்பின் வயிற்றில் சிக்கியிருந்த மூன்று கோல்ஃப் பந்துகளையும் ஒவ்வொன்றாக கவனமாக வெளியே எடுத்துள்ளனர்.
பின்னர் பாம்பின் உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து, வனவிலங்கு மீட்புப் பணியாளர்கள் அதனை பாதுகாப்பாக மீட்டு வனவிலங்கு காப்பகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.





