விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (29) காலை கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ பேரம் தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், நாமல் ராஜபக்ஷ நான்காவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளன.





