நுவரெலியாவில் மரக்கறி விளைச்சல் அமோகம், ஆனால் விலை வீழ்ச்சி விவசாயிகள் வேதனை

நுவரெலியா மாவட்டத்தில்,  மரக்கறி விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்காரணமாக, பெரும்பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக, விவசாயிகள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடித்துவரும் இந்த விலை வீழ்ச்சியினால்,  பயிர்ச்செய்கைக்கு,  செலவு செய்த பணத்தைக்கூட மீளப்பெற முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத்  தள்ளப்பட்டுள்ளதாக, விவசாயிகள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர்கள்,
நுவரெலியா மாவட்டத்துக்கு உட்பட்டப் பகுதிகளில்,  லீக்ஸ், கரட், ,பீட்ரூட் ஆகிய மரக்கறிகளே, அதிகம் பயிரிடப்படுகின்றன.   இவ்வாறு பயிரடப்படும் மரக்கறிகள் லீக்ஸ்(120)கரட்,(150)பீட்ரூட் (160)மிகக் குறைந்த விலைக்கே விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படுகின்றன.
இதனால்,  பயிர்களுக்காக செலவு செய்யும் உற்பத்திக்கான செலவினத்தைகூட பெற முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

லீக்ஸ் கன்று ஒன்றின் விலை ஒரு ரூபாயாகும். அதனை நடுகை செய்து பராமரிக்க  பத்து ரூபாய்க்கு மேலதிகமாக செலவளிக்க வேண்டியுள்ளது. ஆனால், சந்தையில் ஒரு கிலோகிராம் கோவா, 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இது எமக்கு பெரும் பாதிப்பாக அமைந்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் மரக்கறிகளின் விலை சடுதியாக குறைந்துள்ளது. எனவே, விவசாயத்துக்கு முக்கியத்துவம் வழங்கிவருகின்ற நல்லாட்சி அரசாங்கம், நுவரெலியா மற்றும் வெலிமடை போன்ற பகுதிகளின் விவசாயிகள் மீது, கரிசனைக்காட்ட வேண்டும்” என்று கோரியுள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore