பாடசாலை நேரம் மாற்றப்படுகிறதா? பாடசாலைகள் மூடப்படுவது குறித்து அரசாங்கம் விளக்கம்

நாட்டிலுள்ள எந்தவொரு அரச பாடசாலையையும் தன்னிச்சையாக மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் பாடசாலைகள் தொடர்பில் மாத்திரமே அறிவியல் பூர்வமான ஆய்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

60 அல்லது 70 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட சில பாடசாலைகளின் அமைவிடங்களும், தற்போதைய மக்கள் தொகை பரம்பலும் குறிப்பிடத்தக்க வகையில் மாறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மாணவர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ள பாடசாலைகள் தொடர்பில் கோட்ட மற்றும் வலய மட்டங்களில் அறிக்கைகள் கோரப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாடசாலைகளை வெறுமனே திறந்து வைத்திருப்பதை விட, நாட்டிலுள்ள ஒவ்வொரு பிள்ளைக்கும் தரமான கல்வியையும் தேவையான வசதிகளையும் உறுதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக 3,000 புதிய ஆசிரியர்களை விரைவில் கல்வி அமைப்பில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கல்வி மறுசீரமைப்பு என்பது பாடத்திட்ட மாற்றங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், பாடசாலைகளுக்குத் தேவையான பௌதிக மற்றும் மனித வளங்களை வழங்குதல், கல்வி நிர்வாகக் கட்டமைப்பை சீர்திருத்துதல் மற்றும் மதிப்பீட்டு முறைகளை நவீனமயமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இதற்கமைய, 2027ஆம் ஆண்டளவில் 1, 2 மற்றும் 6ஆம் தரங்களுக்கான புதிய பாடத்திட்ட மறுசீரமைப்புகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🕐 பாடசாலை நேரம் மாற்றப்படுகிறதா?

பாடசாலைகள் ஆரம்பிக்கும் மற்றும் முடிவடையும் நேரத்தை மாற்றுவது தொடர்பாக கல்வி அமைச்சினால் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இதுகுறித்து அரசாங்க மட்டத்தில் இதுவரை எந்தக் கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் கல்வி அமைச்சு இது தொடர்பில் ஏதேனும் தீர்மானம் எடுத்தால், அது முறையாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore