கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சம்மாந்துறை மாணவி

அகில இலங்கை போட்டிக்கும் தகுதி

தில்சாத் பர்வீஸ்

சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், 2026ஆம் ஆண்டு கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில், பரிதி வட்டம் வீசுதல் (Discus Throw) பிரிவில் சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலய மாணவி எஸ்.எப்.பி.சதாfப் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

கிழக்கு மாகாண மட்டத்தில் நடைபெற்ற இப்போட்டியில் சிறப்பாகப் பங்கேற்ற மாணவி எஸ்.எப்.பி.சதாfப், தனது திறமையை வெளிப்படுத்தி இரண்டாம் இடத்தைப் பெற்றதுடன், அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.

சம்மாந்துறை கோட்டத்தில் குறித்த பரிதி வட்டம் வீசுதல் பிரிவில் கிழக்கு மாகாணத்தில் வெள்ளி பதக்கம் பெற்று அகில இலங்கை மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ள ஒரே மாணவி எஸ்.எப்.பி.சதாfப் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாணவி சதாfபின் இந்த வெற்றிக்கு அவருக்கு பயிற்சியளித்த ஆசிரியர் யு.எல். றைஸ் அஹமட் அவர்களின் வழிகாட்டலும் பங்களிப்பும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், அகில இலங்கை மட்டப் போட்டியிலும் சிறப்பான பெறுபேற்றை பெற்றிட மாணவி எஸ்.எப்.பி.சதாபுக்கு பாடசாலை சமூகம் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore