- ஷாதிர் ஏ ஜப்பார் –
சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரின் தொலைநோக்குச் சிந்தனை மற்றும் வழிகாட்டலின் அடிப்படையில் புதிதாக உருவாக்கப்பட்ட “SAMMANTHURAI” எனும் பிரமாண்டமான அடையாளச் சின்னம் (Landmark), (03) சனிக்கிழமை மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
சம்மாந்துறை மண்ணின் வரலாற்றுப் பெருமை, தனித்துவமான அடையாளம் மற்றும் பிரதேசத்தின் சிறப்பை வெளிப்படுத்தும் நோக்கில், நவீன கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அடையாளச் சின்னம், இரவு நேரங்களில் ஒளிவெள்ளத்தில் மிளிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பிரதேச சபை வளாகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் விருந்தினர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், சம்மாந்துறையின் பெயர் மற்றும் அடையாளத்தை காட்சிப்படுத்தும் முக்கியமான நினைவுச் சின்னமாகவும் இது அமைந்துள்ளது.
குறிப்பாக, பிரதேசத்தின் அழகிய தோற்றத்தை மேம்படுத்துவதுடன், சம்மாந்துறையின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த புதிய Landmark அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கௌரவ தவிசாளர், கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபைச் செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.





