பிடியாணையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், இன்று (05) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றுடன் தொடர்பாக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் ஞானசார தேரருக்கு எதிராக அண்மையில் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அந்தப் பிடியாணையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரை, குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளன.





