ஞானசார தேரர் 6 ஆண்டு சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை நிறைவு செய்ய மீண்டும் சிறைக்கு

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை அமுல்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை அமுல்படுத்துவதற்காக ஏற்கனவே அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, கடந்த 3ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று (04) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை இன்று (05) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான சமர்ப்பணங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னர், ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை அமுல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, ஞானசார தேரர் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை நிறைவு செய்வதற்காக மீண்டும் சிறைச்சாலைக்கு அனுப்பப்படவுள்ளார்.

முன்னதாக, செப்டம்பர் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நிலையில், அக்டோபர் 1ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் திறந்த பிடியாணையை பிறப்பித்திருந்தது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore