அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மொழிமூல கல்வி வலயங்களுக்கு இடையில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டியில், சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக அணி சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் இன்று (10) அட்டாளைச்சேனை பொது மைதானத்தில் இச்சுற்றுப்போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் அக்கரைப்பற்று, கல்முனை, திருக்கோவில் மற்றும் சம்மாந்துறை ஆகிய நான்கு வலயக்கல்வி அலுவலக அணிகள் பங்கேற்றன.
🏏 தொடர்ச்சியான வெற்றிகளுடன் இறுதிப் போட்டிக்கு!

சுற்றுப்போட்டியில் சிறப்பாக விளையாடிய சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக அணி, தனது முதலாவது போட்டியில் கல்முனை அணியையும், இரண்டாவது போட்டியில் அக்கரைப்பற்று அணியையும், மூன்றாவது போட்டியில் திருக்கோவில் அணியையும் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இறுதிப் போட்டியிலும் அக்கரைப்பற்று அணியை வீழ்த்திய சம்மாந்துறை அணி, அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தைத் தனதாக்கிக் கொண்டது.
🏅 தனிநபர் விருதுகளையும் வென்ற சம்மாந்துறை அணி!
இச்சுற்றுப்போட்டியில் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக அணியின் யாசிர், சிறந்த பந்துவீச்சாளராகவும் தொடர் ஆட்ட நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.
அத்துடன், இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக சம்மாந்துறை அணியின் தலைவரும் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான எஸ். சஹிட் தெரிவு செய்யப்பட்டார்.
🏆 சம்பியன் பட்டம், சிறந்த பந்துவீச்சாளர் விருது, தொடர் ஆட்ட நாயகன் விருது மற்றும் இறுதிப் போட்டி ஆட்ட நாயகன் விருது எனப் பல சிறப்புகளைப் பெற்ற சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக அணிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

சம்மாந்துறை TREND – எமது ஊரின் சாதனைகளை உலகறியச் செய்வோம்!





