தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து! வேனுடன் மோதிய கார் தலைகீழாகக் கவிழ்ந்தது

இலங்கையின் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், 29ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் வேனுடன் மோதிய கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த கார், முன்னால் பயணித்த வேனின் பின்புறத்தில் மோதியதைத் தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியில் தலைகீழாகக் கவிழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் பாரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனினும், விபத்து காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதா என்பது தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பில் தகவலறிந்த தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அதிகாரிகள் உடனடியாக விபத்து இடம்பெற்ற இடத்திற்குச் சென்று, கவிழ்ந்த காரை வீதியிலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

விபத்துக்கான முழுமையான காரணம் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore