இலங்கை டெஸ்ட் அணியில் முக்கிய மாற்றம்! தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிய தனஞ்சய டி சில்வா

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராகப் பணியாற்றி வந்த சகலதுறை வீரர் தனஞ்சய டி சில்வா, தனது தலைமைப் பொறுப்பிலிருந்து உடனடியாக விலகியுள்ளார். எனினும், இலங்கை அணிக்காக வீரராகத் தொடர்ந்து விளையாடத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

2024 ஜனவரி மாதம் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட தனஞ்சய டி சில்வா, தனது முடிவை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவுக்கு எழுதிய கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

“தலைமைப் பொறுப்பை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே எனது உண்மையான கருத்து” என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

18 டெஸ்ட் போட்டிகளில் தலைமை

திமுத் கருணாரத்னவிடமிருந்து தலைமைப் பொறுப்பை ஏற்ற தனஞ்சய டி சில்வா, இலங்கை அணியை 18 டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தியுள்ளார். அவற்றில் இலங்கை அணி ஏழு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.

தலைவராகச் செயல்பட்ட காலப்பகுதியில் அவர் 36.45 என்ற சராசரியில் மொத்தம் 1,130 ஓட்டங்களைப் பெற்றதுடன், 44.44 என்ற பந்துவீச்சு சராசரியில் ஒன்பது விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நன்றி

தனஞ்சய டி சில்வாவின் தலைமைத்துவப் பங்களிப்புக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கை டெஸ்ட் அணிக்கு அவர் வழங்கிய தலைமைத்துவத்துக்கு நன்றி தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம், அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் எஞ்சிய காலப்பகுதிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.

தலைமைப் பொறுப்பிலிருந்து விலகியுள்ள போதிலும், தனஞ்சய டி சில்வா தொடர்ந்து வீரராக அணியில் இடம்பெறத் தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை டெஸ்ட் அணியின் அடுத்த தலைவர் யார்? என்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore