அமெரிக்க இடைக்காலத் தேர்தல் பின்னடைவைத் தொடர்ந்து உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 9% வீழ்ச்சி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சி இடைக்காலத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன.

இதன்படி, அமெரிக்காவின் WTI ரக கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 9% வரை சரிந்து 87.76 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

அதேவேளை, சர்வதேச சந்தையில் முக்கிய விலை நிர்ணயக் குறியீடாகக் கருதப்படும் Brent ரக கச்சா எண்ணெயின் விலையும் 9% க்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்து ஒரு பீப்பாய் 93.61 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியிடம் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்தத் தேர்தல் பின்னடைவுக்கு ஈரானுடனான போர் நிலைமையும் ஒரு காரணம் என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்திருந்தார்.

இந்த அரசியல் சூழ்நிலைகளின் தாக்கம் உலகளாவிய எண்ணெய்ச் சந்தையில் எதிரொலித்துள்ளதாகவும், இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இருப்பினும், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை வீழ்ச்சி இலங்கையின் எரிபொருள் விலைகளில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் இதுவரை உறுதியான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore