உத்தேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தின் ஊடாக, 72 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவு காலத்தை 48 மணித்தியாலங்களாகக் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
‘நாடே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு ஆன்மீக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள 72 மணித்தியால தடுப்புக்காவல் காலத்தை 48 மணித்தியாலங்களாகத் திருத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உத்தேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தின் ஊடாக இந்தத் திருத்தத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.





