சர்வதேச கால்பந்து வாழ்க்கைக்கு விடைகொடுத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ! – 23 ஆண்டுகால பயணம் நிறைவு

போர்த்துக்கல் தேசிய கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

41 வயதான ரொனால்டோ, வியாழக்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நீண்ட காணொளி ஒன்றின் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், போர்த்துக்கல் தேசிய அணியின் புகழ்பெற்ற 7ஆம் இலக்க ஜெர்சியைத் திருப்பி ஒப்படைக்கும் நாள் வந்துவிட்டதாக அவர் தனது ஆதரவாளர்களுக்கு எழுதிய கடிதத்தை வாசித்துள்ளார்.

மேலும், அந்த ஜெர்சி தனக்குச் சொந்தமானது மட்டுமல்ல என்றும், கடந்த 23 ஆண்டுகளாக அதனை அணியும் வாய்ப்பையும் பொறுப்பையும் பெற்றிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரொனால்டோ போர்த்துக்கல் தேசிய அணிக்காக சாதனை அளவாக 234 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். அத்துடன், சர்வதேசப் போட்டிகளில் 146 கோல்களைப் பதிவு செய்து அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் தன்வசம் வைத்துள்ளார்.

அவரது ஓய்வு அறிவிப்புடன், போர்த்துக்கல் அணிக்காக அவர் முன்னெடுத்த 23 ஆண்டுகால சர்வதேச கால்பந்து பயணம் நிறைவுக்கு வந்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore