தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (நவம்பர் 09) விசேட விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த கோரிக்கைக்கு அமைய, குறித்த மாகாணங்களின் ஆளுநர்கள் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளனர்.
இதற்கமைய, திங்கட்கிழமை வழங்கப்படும் விசேட விடுமுறைக்குப் பதிலாக எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 07ஆம் திகதி கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.





