சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியின் 2027ஆம் ஆண்டுக்கான ‘Open Day’ (திறந்த நாள்) நிகழ்வு : எதிர்கால சந்ததிக்கான தொழிற்கல்வி விழிப்புணர்வு!

சர்ஜுன் லாபீர்

​அம்பாறை மாவட்டத்தில் சுமார் 52 வருட கால நீண்ட நெடிய பாரம்பரியத்தைக் கொண்ட சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியின் 2027ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் சேர்க்கையை முன்னிட்ட ‘Open Day’ (திறந்த நாள்) விழிப்புணர்வு நிகழ்வு, இன்று கல்லூரி அதிபர்  எம்.எம். சகுபான் அவர்களின் தலைமையில் கல்லூரியின் பிரதான அரங்கத்தில்  சிறப்பாக இடம்பெற்றது.
​
இளம் தலைமுறையினரிடையே தொழிற்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், கல்லூரியில் பயிற்றுவிக்கப்படும் பல்வேறு தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிப் பாடநெறிகள் குறித்து பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைக் கல்லூரியில் இணைத்துக் கொள்வதுமே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.
​
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன் அவர்கள் பிரதம அதிதியாகவும், சம்மாந்துறை பிரதேச செயலாளர்  எஸ்.எல். முகம்மது ஹனீபா அவர்கள் கௌரவ அதிதியாகவும், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்  பி.எம்.எம். அறபாத் அவர்கள் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
​நிகழ்வின் போது, நவீன வேலைவாய்ப்புச் சந்தையில் தொழிற்கல்வி வழங்கும் வேலைவாய்ப்பு முன்னுரிமைகள், சுயதொழில் வாய்ப்புகள் மற்றும் 2027 கல்வியாண்டிற்கான விண்ணப்ப நடைமுறைகள் குறித்து மாணவர்களுக்குத் தெளிவான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.
​
தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு பாடசாலைகளில் இருந்து வருகை தந்திருந்த மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்ட இந்நிகழ்வானது, ஐந்தரை தசாப்தகாலமாக இப்பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்குப் பங்காற்றிவரும் சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியின் மற்றுமொரு மைல்கல்லாக அமைந்து, பல நூறு இளைஞர்களின் எதிர்கால ஒளிமயமான தொழில் பாதைக்கு வழிவகுத்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore