கர்ப்பிணித் தாய்மார்களிடமிருந்து குழந்தைகளுக்கு பரவக்கூடிய ஆபத்தான தொற்றுநோய்களைத் தடுக்கும் நோக்கில், இலங்கையின் அனைத்து தாய்-சேய் நல மருத்துவ நிலையங்களிலும் (Maternity Clinics) “Triple Elimination” திட்டம் இன்று (01) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, கர்ப்பிணித் தாய்மார்களுக்கான வழக்கமான HIV மற்றும் Syphilis பரிசோதனைகளுடன் சேர்த்து, இனிமேல் Hepatitis B வைரஸ் தொற்றிற்கான இரத்தப் பரிசோதனையும் கட்டாயமாக மேற்கொள்ளப்படும்.
முன்னதாக, தாயிடமிருந்து குழந்தைக்கு HIV மற்றும் Syphilis பரவலைத் தடுக்கும் “Dual Elimination” திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய இலங்கை, 2019 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பின் (WHO) அங்கீகாரத்தையும் பெற்றிருந்தது.
அதன் தொடர்ச்சியாக, தற்போது Hepatitis B நோயையும் உள்ளடக்கிய “Triple Elimination” திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது தாய் மற்றும் குழந்தை சுகாதார பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதாவது, நாடு முழுவதும் உள்ள அனைத்து தாய்-சேய் நல மருத்துவ நிலையங்களிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனும் விடயமாகும்.





