பொதுமக்களுக்கு இடையூறு – மேலும் பல மோட்டார் சைக்கிள்கள் சிக்கின

வெசாக் அலங்காரங்களை பார்வையிட வரும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், அதிக சத்தத்தை எழுப்பும் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்களை பண்டாரகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது குறித்த மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் தமது பொறுப்பிற்குள் எடுத்துள்ளனர்.

பொறுப்பேற்கப்பட்ட பெரும்பாலான மோட்டார் சைக்கிள்களின் சைலன்சர்கள் மாற்றப்பட்டு அல்லது வெட்டப்பட்டு, முறையற்ற விதத்தில் பாகங்கள் இணைக்கப்பட்டு அதிக சத்தத்தை எழுப்பும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகம நகரில் கடமையிலிருந்த போக்குவரத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர்கள், பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மோட்டார் சைக்கிள்களை மோட்டார் வாகனப் பரிசோதகரிடம் ஒப்படைத்து, குற்றப்பத்திரிகை தயார் செய்ததன் பின்னர் உரிமையாளர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore