சரித்திரம் படைத்த ருமேஷ் தரங்க!

இலங்கையின் ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க, ஆண்களுக்கான உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் (Men’s Javelin Throw World Rankings) முதல் 5 சிறந்த வீரர்களின் பட்டியலுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளார்.

சமீபத்தில் நிறைவடைந்த சில போட்டித் தொடர்களில் அவர் வெளிப்படுத்திய சிறந்த திறமைகளின் காரணமாக, உலகத் தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னோக்கி நகர அவரால முடிந்துள்ளது.

இதற்கமைய, 1,287 சராசரி செயல்திறன் புள்ளிகளைப் பெற்று, உலகத் தரவரிசையில் அவர் 5ஆம் இடத்தைப் உறுதி செய்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (01) மொரோக்கோவில் நடைபெற்ற ‘ரபாத் டைமண்ட் லீக்’ (Rabat Diamond League) தொடரில், 85.97 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து ருமேஷ் தரங்க வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார்.

அவரது இந்தச் சிறப்பான திறமையே உலகத் தரவரிசையில் அவர் முன்னிலைக்கு வரக் காரணமாக அமைந்துள்ளது.

ஆண்களுக்கான உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் ஜெர்மனியின் ஜூலியன் வெபர் முதலிடத்தில் உள்ளார்.

உலக அளவில் முன்னணியில் உள்ள 5 ஈட்டி எறிதல் வீரர்கள்:
ஜூலியன் வெபர் (Julian Weber) – ஜெர்மனி

ஆண்டர்சன் பீட்டர்ஸ் (Anderson Peters) – கிரெனடா

கெஷோர்ன் வால்காட் (Keshorn Walcott) – டிரினிடாட் மற்றும் டொபாகோ

நீரஜ் சோப்ரா (Neeraj Chopra) – இந்தியா

ருமேஷ் தரங்க (Rumesh Tharanga) – இலங்கை

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore