அமெரிக்க அரசாங்கத்தால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட P628 ரோந்துக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
இக்கப்பல் இலங்கை கடற்படையில் இணைவதன் மூலம் நாட்டின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடலோர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த கப்பலை இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று (04) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு, இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.





