தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து விபத்து: 10 பேர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னாடுவ (Pinnaduwa) நுழைவாயிலுக்கு அருகில் இன்று (08) இடம்பெற்ற பேருந்து விபத்தில் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து காலி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, பின்னாடுவ நுழைவாயிலின் பாதுகாப்பு தடுப்பைக் உடைத்துக்கொண்டு அருகிலிருந்த மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் பொலிஸாரும் அதிவேக நெடுஞ்சாலை அதிகாரிகளும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் தொடர்பில் பின்னாடுவ அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore