18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் தங்களது கைபேசிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களில் நிர்வாண அல்லது பாலியல் வெளிப்படையான படங்களை பார்ப்பது, அனுப்புவது அல்லது உருவாக்குவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரித்தானிய அரசு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பிரித்தானிய பிரதமர் Keir Starmer, Apple மற்றும் GOOGLE உள்ளிட்ட நிறுவனங்களுக்கு, சாதனங்களில் ஏற்கனவே உள்ள பாதுகாப்பு வசதிகளை செயல்படுத்தவோ அல்லது புதிய மென்பொருள் புதுப்பிப்புகளை அறிமுகப்படுத்தவோ அறிவுறுத்தியுள்ளார்.
இதன் மூலம் 18 வயதிற்குட்பட்டவர்கள் பாலியல் வெளிப்படையான அல்லது நிர்வாணப் படங்களை எடுப்பது, பகிர்வது மற்றும் பார்ப்பது போன்ற செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் என பிரித்தானிய அரசு நம்புகிறது.
சிறார்களின் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. BBC செய்தி சேவை இதனைத் தெரிவித்துள்ளது.





