கனடா – பொஸ்னியா இடையேயான ஆட்டம் சமநிலையில் நிறைவு

2026 பிபா (FIFA)உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில், தொடரை நடத்தும் நாடான கனடா மற்றும் பொஸ்னியா-ஹெர்சகோவினா அணிகளுக்கு இடையே இடம்பெற்ற மிகவும் பரபரப்பான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் மிகவும் விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின.

இந்த போட்டியின் 21வது நிமிடத்தில் பொஸ்னியா வீரர் ஜொவோ லுகி கோல் அடித்தார்.

இதனால் ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் பொஸ்னியா அணி முன்னிலை வகித்தது.

இதையடுத்து, ஆட்டத்தின் 2வது பாதியில் கனடா கோல் அடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டது.

அதன்படி, ஆட்டத்தின் 78வது நிமிடத்தில் கனடா வீரர் செலி லரின் கோல் அடித்தார்.

இதன் மூலம் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலை பெற்றது.

இதையடுத்து ஆட்டத்தின் இறுதியில் இரு அணிகளும் கோல் அடிக்க போராடின. ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.

இறுதியில் 1-1 என்ற கோல் கணக்கில் இந்த ஆட்டம் சமநிலையில் முடிந்தது.

இப்போட்டி சமநிலையில் நிறைவடைந்தமையினால் கனடா, பொஸ்னியா ஆகிய அணிகளுக்கு தலா 1 புள்ளி வீதம் வழங்கப்பட்டது.

இதன் மூலம் தலா 1 புள்ளியுடன் குழு பி பிரிவில் முதல் இடத்தில் கனடாவும், 2வது இடத்தில் பொஸ்னியாவும் இடம்பெற்றுள்ளன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore