டொனால் டிரம்ப் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

ஜி – 7 மாநாட்டிற்கு இடையே அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்-ஐ இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது டொனால்டு டிரம்பிடம், பிரதமர் மோடி “மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்டுவதற்கான நம்பிக்கையை மீண்டும் துளிர்க்கச் செய்தமைக்கு நன்றி. ஹார்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும். கடல்சார் துறையில் லட்சக்கணக்கான இந்தியக் கப்பல் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களின் பாதுகாப்பும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தது” என தெரிவித்தார்.

பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு டொனால்டு டிரம்ப் “இது ஒரு சிறந்த சந்திப்பு. வேலைவாய்ப்பு துறையில் இந்தியாவுடன் நாங்கள் எப்போதும் மிகச் சிறந்த உறவைக் கொண்டுள்ளோம். மேற்கு ஆசியா உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் இந்தியா பெரும் பங்காற்றுகிறது” என தெரிவித்தார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore