தமிழகம் முழுவதும் மகளிர் கட்டணமில்லா பயணம்!

இந்தியாவின் தமிழ்நாடு முழுவதும் மகளிர் கட்டணமில்லா பயணம் திட்டத்தை செயல்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது. 21,527 அரசு பேருந்து மூலம் நாளொன்றுக்கு 2 கோடி பயணிகள் பயணம் செய்வது பற்றியும் அதில் 64 சதவீத பயணிகள் கட்டணமின்றி பயணம் செய்வது பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் மகளிர் கட்டணமில்லா பயணம் திட்டத்தை செயல்படுத்துவது, சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சாரப் பேருந்துகளை பெருமளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது, போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் மற்றும் அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் தமிழக முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தினார்.

புதிதாக கொள்முதல் செய்யப்படும் பேருந்துகள் குளிர்சாதன மின்சாரப் பேருந்துகளாக இருக்க வேண்டும் என்றும், பயணிகள் பணமில்லா பரிவர்த்தனை மூலம் பயணிக்க ஸ்மார்ட் கார்டு முறையை அமல்படுத்த வேண்டும் எனவும், பேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் விதமாக Bus Rapid Transit System திட்டத்தை அமல்படுத்துவது குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், தலைமைச் செயலாளர் மு.சாய்குமார் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore