ஈரான் விவகாரம்: சொந்தக் கட்சியினர் மீதே டொனால்ட் டிரம்ப் பாய்ச்சல்!

ஈரான் நாடு தற்போது கடுமையான நெருக்கடியில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு தேவையான அனைத்தையும் வழங்க ஈரான் தயாராக இருக்கும் இந்தச் சூழலில், அமெரிக்க செனட் சபை கொண்டு வந்துள்ள போர் அதிகாரச் சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு தேவையற்ற ஒன்று என அவர் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து வாக்களித்த நான்கு குடியரசுக்கட்சி செனட்டர்களை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

அவர்களின் இந்த நடவடிக்கை ஈரானுக்கு சாதகமாக அமைந்து, நாட்டின் எதிரிக்கு ஆதரவளிப்பது போல் இருப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இந்த முடிவுகள் தனது பணிகளை மேலும் கடினமாக்கியுள்ள போதிலும், இந்த விவகாரத்தை தான் வெற்றிகரமாக முடித்துக்காட்டப் போவதாக அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore