சம்மாந்துறையில் சுகாதாரமற்ற உணவகம் முற்றுகை; நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

சம்மாந்துறை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இன்று (புதன்கிழமை) மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, சுகாதாரமற்ற நிலையில் உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்த உணவு நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டது.

இதன்போது, மனித பாவனைக்கு பொருத்தமற்ற மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள், சோறு உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட உணவுப் பொருட்கள் உடனடியாக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் குறித்த உணவுப் பொருட்களை உடனடியாக அழிக்குமாறும், சம்பந்தப்பட்ட உணவு நிலையத்தை உடனடியாக மூடுமாறும் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

பொதுமக்களின் சுகாதாரத்தையும் உணவுப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இத்தகைய சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களுக்கு வேண்டுகோள்

பொதுமக்கள் தாங்கள் உணவருந்தும் இடங்களின் சுகாதாரத் தரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும், சுகாதாரமற்ற உணவகங்கள் அல்லது உணவு விற்பனை நிலையங்கள் தொடர்பான தகவல்களை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

“ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க, விழிப்புணர்வுடன் செயற்படுவோம்” என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore